GEETHA RAMANICHANDRAN NOVEL
கீதா
கதாநாயகன்: பிரபு
கதாநாயகி: கீதா
ஆண்டு: 1970களின் பிற்பகுதி
ஆசிரியர்: ரமணிசந்திரன்
கீதா (கதாநாயகி) கல்லூரி விடுமுறையின் போது தன் சகோதரனின் நண்பன் பிரபுவை (கதாநாயகன்) சந்திக்கிறாள். கீதாவும் பிரபுவும் நேசம் கொள்கிறார்கள். கீதாவின் அண்ணன் குமரேசனும் இவர்களின் காதலுக்கு ஒப்புதல் அளிக்கிறான். சில மாதங்களுக்குப் பிறகு, தவிர்க்க முடியாத காரணத்தால் சுகுணாவை திருமணம் செய்து கொண்டதாக குமரேசன் அனைவருக்கும் தெரிவிக்கிறான்.
கீதாவின் தந்தை சிவநேசர் தனது மகன் குமரேசன் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்கிறார். இதனால் குமரேசனையும்,பிரபுவையும் கீதாவால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மூன்று வருடங்கள் உருண்டோடுகின்றன. குமரேசனை ஏற்கும்படி கீதா தன் தந்தையிடம் கோரிக்கை வைக்கிறாள். இறுதியாக சிவநேசர் கீதாவை சென்னையில் உள்ள குமரேசன் வீட்டிற்கு அனுப்புகிறார்.
குமரேசனின் மனைவி சுகுணா, கீதாவை அரைமனதாக வரவேற்கிறாள். அங்கே பிரபுவைக் கண்டு கீதா மகிழ்கிறாள். விரைவில் இருவரும் காதலிக்கின்றனர். மறுபுறம், சுகுணா கீதாவை தனது சகோதரர் ஜெயபாலுக்கு திருமணம் செய்ய அனைவரையும் கட்டாயப்படுத்துகிறாள். குமரேசன்,கீதா இருவரும் மறுக்கின்றனர்.
இறுதியாக சுகுணா கீதாவிடம் உண்மையைச் சொல்கிறாள். கடந்த காலத்தில் சுந்தரம் என்பவரை திருமணம் செய்யும் நோக்கில்அவருக்கு சுகுணா கடிதம் எழுதுகிறாள். ஆனால் துரதிஷ்டவசமாக சுந்தரம் இறந்து விடுகிறார். பின்னர் சுகுணா குமரேசனை மணந்து கொள்கிறாள். அக்கடிதத்தை வைத்திருக்கும் ஜெயபால் இப்போது சுகுணாவைப் பணத்திற்காக பிளாக்மெயில் செய்கிறான். ஆனால் கீதாவைப் பார்த்தவுடன் ஜெயபால் தன் திட்டத்தை மாற்றுகிறான். எனவே இப்போது கீதாவை திருமணம் செய்து வைக்குமாறு ஜெயபால் சுகுணாவை மிரட்டுகிறான்.
கீதா சுகுணாவைப் புரிந்துகொண்டு அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். கீதா ஜெயபாலின் இடத்திற்குச் சென்று கடிதத்தை எடுக்கும்போது ஜெயபாலிடம் சிக்கிக் கொள்கிறாள். கீதாவைக் காப்பாற்ற சுகுணா பிரபுவிடம் உதவி கேட்கிறாள். பிரபு கீதாவைக் காப்பாற்றி கடிதத்தையும் கைப்பற்றி விடுகிறான்.
இறுதியாக ஜெயபால் குமரேசனிடம் சுந்தரம் மற்றும் சுகுணாவின் உறவைப் பற்றி தெரிவித்து விடுகிறான். அடுத்து என்ன நடக்கும்? மேலும் அறியக் கதையைப் படியுங்கள். இந்தக் கதையைப் படித்தீர்களா? கருத்துப் பிரிவில் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தக் கதை என் தனிப்பட்ட வாசிப்பில் மிகவும் பிடித்தது.