ENDHAN SINDHANEYE ENDHAN SITHAMEY RAMANICHANDRAN NOVEL
எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே
கதாநாயகன்: அன்பரசன்
கதாநாயகி: ஷீதள்
ஆண்டு: 2018
ஆசிரியர்: ரமணிசந்திரன்
பொறியியல் பட்டதாரியான அன்பரசன் (கதாநாயகன்) பாபுராமின் வீட்டில் தோட்ட வேலை செய்கிறான். சில வருடக் கடின உழைப்பு, புத்திசாலித்தனம் மற்றும் விசுவாசத்திற்குப் பிறகு அன்பரசன் பாபுராமின் குடும்பத்திலும் வணிகத்திலும் மிக முக்கியமான நபராகிறான்.
பாபுராம் அன்பரசனும் தனது மகள் ஷீதளும் (கதாநாயகி) திருமணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.அன்பரசன் உடனடியாக மறுத்துவிடுகிறான். கடந்த காலத்தில அன்பரசனைக் காதலித்து பிரீதம் மோசடி செய்துள்ளாள் .அன்பரசன் மீது ப்ரீத்தமின் தந்தை பொய்க் கொலை வழக்குப் பதிவு செய்து சிறைத் தண்டனை பெற்றுத் தருகிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு அன்பரசன் குற்றமற்றவன் என்பது நிரூபிக்கப்படுகிறது. சிறையில் இருக்கும் மகனைப் பார்க்க முடியாமல் அன்பரசனின் தாயார் இறந்துவிடுகிறார்.
அன்பரசன் பிரீதம் மற்றும் அவள் தந்தையைப் பழிவாங்க நினைக்கிறான். அதனால் சென்னை சென்று ப்ரீத்தத்தை சந்திக்கிறான். ஆனால் ப்ரீதம் தான் நிரபராதி என்றும், நடந்தவை அனைத்தையும் அறியாதவள் என்றும் கூறுகிறாள்.
அன்பரசனைக் காதலிக்கும் ஷீதள் சென்னைக்கு வருகிறாள். பிரீதம் போலி என்பதை ஷீதள் நிரூபிப்பாளா? ஷீதளுக்கும் அன்பரசனுக்கும் என்ன நடக்கிறது? இன்னும் தெரிந்து கொள்ளக் கதையைப் படியுங்கள்.
இந்தக் கதையை யாராவது படித்திருக்கிறார்களா? கருத்துப் பிரிவில் உங்கள் விருப்பங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்