ENADHU SINDHAI MAYANGUTHADI RAMANICHANDRAN NOVEL
எனது சிந்தை மயங்குதடி
கதாநாயகன்: சைதன்யன்
கதாநாயகி: மதுவந்தி
ஆண்டு: 2006
ஆசிரியர்: ரமணிசந்திரன்
சைதன்யனும் (கதாநாயகன்) மதுவந்தியும் (கதாநாயகி) ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இவர்களது திருமண தேதியும் பெற்றோர்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. மதுவந்தியின் பெரியப்பாவின் மகளான சிந்தாமணி, சைதன்யன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறுகிறாள். இதையடுத்து மதுவந்தியின் தந்தை திருமணத்தை ரத்து செய்கிறார்.
மூன்று வருடங்கள் உருண்டோடுகின்றன. சைதன்யனைப் பற்றி தான் பொய் சொன்னதாக சிந்தாமணி ஒப்புக்கொள்கிறாள். மதுவந்தியிடம் மன்னிப்பும் கேட்கிறாள். மதுவந்தி அதிர்ச்சியடைகிறாள். அவள் சைதன்யனை சந்தித்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறாள். ஆனால் சைதன்யன் அவளிடம் மிகவும் கடுமையாக பேசுகிறான்.
மதுவந்தி நம்பிக்கையிழந்து அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறாள். சைதன்யனின் தந்தை ஞானசேகரன் மதுவந்தியை சந்தித்து சைதன்யன் அவளை இன்னும் காதலிப்பதாகக் கூறுகிறார். அவரின் யோசனைப்படி மதுவந்தி சைதன்யனுடன் தொடர்பில் இருப்பதற்காக அவர்களது அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறாள்.
ஒரு நாள் சைதன்யன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மதுவந்தி அவனை மிகவும் நன்றாக கவனித்துக் கொள்கிறாள். விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக சைதன்யனுக்கு சமீபமாக நடந்தது எதுவும் நினைவில் இல்லை. மேலும் சைதன்யன் மதுவந்தியை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சைதன்யனை திருமணம் செய்து கொள்ளுமாறு மதுவந்தியை கேசவனும் ஞானசேகரனும் வற்புறுத்துகின்றனர்.
மதுவந்தியின் முடிவு என்னவாக இருக்கும்? மேலும் அறியக் கதையைப் படியுங்கள். இந்தக் கதையை நீங்கள் முன்பே படித்திருக்கிறீர்களா? கருத்துப் பிரிவில் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.