EN KANNIN PAVAIYANDRO RAMANICHANDRAN NOVEL
என் கண்ணின் பாவையன்றோ
கதாநாயகன்: சித்ரஞ்சன்
கதாநாயகி: அனுபமா
ஆண்டு: 1980’கள்
ஆசிரியர்: ரமணிசந்திரன்
அனுபமா (கதாநாயகி) மிகவும் கட்டுக்கோப்பான குடும்பத்தைச் சேர்ந்தவள். மேலும் அவள் சித்திரஞ்சனின் (ஹீரோ) நிறுவனத்தில் பணிபுரிகிறாள். விரைவில் சித்ரஞ்சனும்,அனுபமாவும் காதல் வயப்படுகிறார்கள். அனுபமா தன் தோழி நீலாவிடம் தன் காதலைப் பற்றி கூறுகிறாள்.
சித்ரஞ்சனை காதலிக்கும் நீலா அனுபமா மீது பொறாமை கொள்கிறாள். தந்திரத்தனமாக செயல்பட்டு அனுபமாவை விபச்சார வழக்கில் கைது செய்ய வைக்கிறாள். நீதிமன்றத்தில் அனுபமாவின் வாதம் நிராகரிப்படுகிறது. அனுபமாவை எச்சரித்து விடுவிக்கிறார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அனுபமா தன்னை ஏமாற்றிவிட்டதாக சித்ரஞ்சன் உணர்கிறான். எனவே அவன் அனுபமாவின் சகோதர்களை அணுகி அனுபமாவை ஒரு நாள் இரவுக்கு அழைக்கிறான். பெரும் பணத்தேவை காரணமாக அனுபமாவின் சகோதரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
அனுபமாவையும் வற்புறுத்தி சித்ரஞ்சனிடம் அனுப்புகிறார்கள்.
அனுபமா தன்னை சித்ரஞ்சனிடம் விளக்க முயல்கிறாள் ஆனால் சித்தரஞ்சன் செவிசாய்க்க மறுக்கிறான்.கடைசியாக அனுபமா ரயிலில் தற்கொலைக்கு முயல்கிறாள்.
சித்ரஞ்சன் அனுபமாவின் அண்ணி மங்களத்தின் உதவியுடன் அனுபமாவைக் காப்பாற்றுகிறான். இந்த சம்பவங்களால் அனுபமாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
சித்ரஞ்சன் மருத்துவ உதவியை அனுபமாவிற்கு ஏற்பாடு செய்கிறான்.குணமடைந்த பின் அனுபமா சித்ரஞ்சனை மன்னிக்கிறாள்.
நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அனுபமா சித்ரஞ்சனை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள் . எனவே சித்ரஞ்சன் அனுபமாவின் வழக்கை மீண்டும் மேல்முறையீடு செய்கிறான் . அனுபமா வெற்றி பெறுவாளா ?
மேலும் அறிய நாவலைப் படியுங்கள்.
இந்த நாவலை நீங்கள் படித்திருக்கிறீர்களா? இந்த நாவல் படிப்பவர்களுக்கு மிகவும் மனச்சோர்வை குடுக்கும் . கருத்துப் பிரிவில் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்நாவலை ஆடியோ வடிவில் கேட்க