CHITHIRAM PESUTHADI RAMANICHANDRAN NOVEL
சித்திரம் பேசுதடி
கதாநாயகன்: மகேந்திரன்
கதாநாயகி: தரங்கிணி
ஆண்டு: 2023
ஆசிரியர்: ரமணிசந்திரன்
தரங்கிணி (கதாநாயகி) தன் பாட்டியுடன் ஒரு கிராமத்தில் வசித்து கொண்டு பிரீலான்சராக வேலை செய்து இருக்கிறாள் மகேந்திரனும் (கதாநாயகன்) தனது தாத்தாவைச் சந்திக்க கிராமத்திற்கு வருகிறான்.
ஆரம்பத்தில் மகேந்திரனுக்கு தரங்கிணி மீது நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனால் பின்னர் அவளது உண்மையான தன்மையைப் புரிந்துகொண்டு அவர்கள் நல்ல நண்பர்களாக மாறுகிறார்கள்.அவர்கள் தங்கள் தொழிலில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். ஒரு நாள் தரங்கிணியின் அப்பாவும், மாற்றாந்தாய் ஆனந்தியும் விடுமுறைக்காக ஊருக்கு வருகிறார்கள்.
ஆனந்தி, மருத்துவர் செந்தில்நாதனுடன் தரங்கிணியின் திருமணத்தை நிச்சயிக்கிறார். கிராமத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, தரங்கிணியைத் திருமணம் செய்து கொள்ள செந்தில்நாதன் சம்மதிக்கிறார். ஆனால் தரங்கிணிக்கு மகேந்திரனின் மேல் தான் விருப்பம். ஆனந்தி தந்திரமானவராக இருப்பதால், தரங்கிணி செந்தில்நாதனை திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்துள்ளாள் என்று அனைவரையும் நம்ப வைக்கிறார்.
ஒருநாள் தரங்கிணி, செந்தில்நாதனைத் திருமணம் செய்து கொள்வதில் தனக்கு விருப்பமில்லை என்று நேரடியாகத் தெரிவிக்கிறாள். செந்தில்நாதன் புரிந்து கொண்டு விலகிவிடுகிறார்.ஆனந்திக்கு ஆத்திரம் தாளவில்லை. இம்முறை அவர் நன்றாக யோசித்து பாண்டிராஜாவுடன் தரங்கிணியின் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். மகேந்திரன் சரியான நேரத்தில் வந்து தரங்கிணியுடன் தனது திருமணத்தை நிச்சயித்து கொள்கிறான்.
திருமண நாள் அன்று தரங்கிணி காணாமல் போகிறாள். தரங்கிணிக்கு என்ன ஆகிறது? மேலும் அறிய நாவலைப் படியுங்கள். இந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா? கருத்துப் பிரிவில் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்நாவலின் ஆடியோவைக் கேட்க கீழே கிளிக் செய்யவும்.