ANBU MANAM MAARIYADHEN RAMANICHANDRAN NOVEL
அன்பு மனம் மாறியதேன்
கதாநாயகன்: தனசீலன்
கதாநாயகி: சௌமினி
ஆண்டு: 2015
ஆசிரியர்: ரமணிசந்திரன்
சௌமினி (கதாநாயகி) தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறாள். எழுத்தாளர் ராஜா கம்பீரனின் தனிப்பட்ட செயலாளராகவும் பணியாற்றுகிறாள். ஆரம்பத்தில் ராஜா கம்பீரன் சௌமினியை நன்றாக நடத்துகிறார் ஆனால் பின்னர் அவர் அவளைப் பயன்படுத்திக் கொள்கிறார். எழுத்து வேலை மட்டுமல்லாது அவரது தனிப்பட்ட வீட்டு வேலைகள் என அவள் மீது அவர் அதிக சுமை ஏற்றுகிறார். சௌமினிக்கு பணத்தேவை இருப்பதால் அவளால் வேலையை விட முடியவில்லை.
சௌமினியின் தம்பி படிக்காமல் வீட்டில் பிரச்சனையை உண்டாக்குகிறான். சௌமினி விரக்தியடைந்து, தனக்கு உதவி தேவை என உணர்கிறாள். அதனால் அவள் தன் முன்னாள் காதலன் தனசீலனை (கதாநாயகன்) சந்திக்கிறாள்.
தனசீலனின் குடும்பத்தினர் சௌமினியைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். அவர்கள் அவளைப் புறக்கணிக்கிறார்கள். சௌமினி குழப்பமடைந்து தனசீலனிடம் கரணம் கேட்கிறாள். அப்போது தனசீலன் சௌமினி அவன் மீது போலீசிடம் புகார் அளித்ததகாக குற்றம் சாட்டுகிறான், மேலும் அவளிடம் மிகவும் கடுமையாகப் பேசுகிறான். சௌமினி மறுத்து அவள் குற்றமற்றவள் என்று நிரூபிக்க முயல்கிறாள்.
சௌமினி தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பாளா?தனசீலனின் மேல் யார் புகார் கொடுத்திருப்பார்கள்? ஏதேனும் யூகங்கள் உள்ளதா? கருத்துப் பகுதியில் உங்கள் பதிலை இடுங்கள். படிக்க விரும்புகிறேன். தனசீலனும் சௌமினியும் சமரசம் ஆவார்களா? மேலும் அறியக் கதையைப் படியுங்கள்.
ஒரு கதையை எழுதுவதற்கு முன், ஆராய்ச்சிப் பணிகளைப் பற்றிய சில நுண்ணறிவுகளை இந்தக் கதை நமக்குத் தருகிறது. இந்தக் கதையைப் படித்தீர்களா? கருத்துப் பிரிவில் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.