AMUDHAM VILAIYUM RAMANICHANDRAN NOVEL
அமுதம் விளையும்
கதாநாயகன்: உமாகாந்தன்
கதாநாயகி: மானசி
ஆண்டு: 1990கள்
ஆசிரியர்: ரமணிசந்திரன்
உமாகாந்தன் (கதாநாயகன்) தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு தனது மகள் இந்துமதி மற்றும் சகோதரி ரஞ்சனியுடன் வசித்து வருகிறான். கடந்த காலத்தில் மானசி (கதாநாயகி) தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள். ஆனால் அவளுடைய பெற்றோரின் மறைவுக்குப் பிறகு மானசியின் பெரியப்பாக்கள் அவளுடைய சொத்தின் மீது பேராசைப்படுகிறார்கள். அதனால் மானசியின் சம்மதம் இல்லாமல் அவளுடைய திருமணத்தை நிச்சயிக்கிறார்கள்.
மானசி தன் பெரியப்பா மக்களின் உதவியுடன் திருமணத்திலிருந்து தப்பிக்கிறாள். அவள் அனாதை இல்லத் தலைவியைச் சந்தித்து உதவி கேட்கிறாள். அவர் உமாகாந்தனின் மகள் இந்துமதிக்கு கம்பனியனாக மானசியை அனுப்புகிறார். மானசி தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாள்.
மானசி தன் வேலையை அர்ப்பணிப்புடன் செய்து குடும்பத்தில் உள்ள அனைவருடனும் பழகுகிறாள். பேஷன் டிசைனிங்கில் கல்வியையும் மானசி தொடர்கிறாள். உமாகாந்தனும் ,ரஞ்சினியும் மானசியைப் பற்றி வித்தியாசமாக உணர்கிறார்கள்.ரஞ்சனியை அவளது காதலன் சுந்தருடன் மானசி சமரசம் செய்து வைக்கிறாள். இதற்கிடையில் மானசி உமாகாந்தன் மீதான தன் காதலை உணர்கிறாள்.
இந்நிலையில் மானசி தன்னுடைய பெரியப்பாக்களால் கடத்தப்படுகிறாள். மானசியை உமாகாந்தன் காப்பாற்றுவானா? மேலும் அறியக் கதையைப் படியுங்கள். இந்தக் கதையைப் படித்திருக்கிறீர்களா? கருத்துப் பிரிவில் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.