AASAI AASAI AASAI RAMANICHANDRAN NOVEL
ஆசை ஆசை ஆசை
கதாநாயகன்: வசீகரன்
கதாநாயகி: மதிவதனி
ஆண்டு: 2008
ஆசிரியர்: ரமணிசந்திரன்
மதிவதனியின் (கதாநாயகி) அத்தை மகளான மோகனாவுக்கும் வசீகரனின் (கதாநாயகன்) அத்தை மகனான உதயனுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணத்தின் போது வசீகரன் மதிவதனியின் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை மோசமாக செய்துள்ளதாக அடிக்கடி குற்றம் சாட்டுகிறான்.
வசீகரனின் சித்தப்பா மகனான ரஞ்சனும் மதிவதனியின் சித்தப்பா மகளான சௌமினியை காதலிக்கிறான். ரஞ்சன் மற்றும் சௌமினி திருமணம் நடக்காது என்று வசீகரன் மதிவதனியை எச்சரிக்கிறான். மதிவதனியும் வசீகரனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கிறாள்.
திருமணம் முடிந்த உடனேயே அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறார்கள். மதிவதனி சொந்தமாக பொக்கே செயது கொடுக்கும் தொழில் செய்து வருகிறாள். வசீகரன் அடிக்கடி பிசினஸ் ஆர்டருக்காக மதிவதனியை தொடர்பு கொள்கிறான். விரைவில் அவர்கள் தங்கள் காதலை உணர்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் காதலை சொல்லிக்கொள்ளவில்லை.
ரஞ்சன் மற்றும் சௌமினியின் காதலை ரஞ்சனின் குடும்பத்தினர் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் ரஞ்சனும் சௌமினியும் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்கள். வசீகரன் அவர்களின் அன்பைப் புரிந்துகொண்டு குடும்பத்தில் உள்ள அனைவரையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறான்.
இறுதியாக வசீகரன் மதிவதனியிடம் காதலை சொல்வதுடன் நாவல் முடிகிறது. இந்த நாவல் எனது தனிப்பட்ட வாசிப்பில் மிகவும் பிடித்தது. திருமண நிகழ்வுகள் மற்றும் சடங்குகளின் மூலமாகக் கதையை ஆசிரியர் விவரித்துள்ளார். சூழ்நிலைகள் மற்றும் கதாபாத்திரங்களைக் கொண்டு கதையை மேம்படுத்தியுள்ளார்.
இந்த நாவலை நீங்கள் படித்திருக்கிறீர்களா? கருத்துப் பிரிவில் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.