ஆசிரியர் குறிப்பு
இயற்பெயர்: ரமணி
கணவர் பெயர்: சந்திரன்
பிறந்த தேதி: ஜூலை 10, 1938
இடம்: காயாமொழி கிராமம், திருச்செந்தூர்
திருமதி.ரமணிசந்திரன் அவர்கள் மிகவும் புகழ் பெற்ற தமிழ் நாவலாசிரியர். மேலும் இவர் பெண்கள் விரும்பும் வகையில் காதல் மற்றும் குடும்பக் கதைகளை நாற்பது வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
திருமதி.ரமணிசந்திரன் அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை 1970களின் மத்தியில் தொடங்கினார். 1980கள் மற்றும் 1990களில் மிகவும் புகழ் பெறத் தொடங்கினார்.
திருமதி. ரமணிசந்திரன் அவர்கள் 2020ஆம் ஆண்டு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி கையால் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார்.
ஏன் திருமதி.ரமணிசந்திரன் அவர்களை வாசகர்கள் மிகவும் கொண்டாடுகிறார்கள்?
ரமணிசந்திரனின் கதைகள் படிப்பதற்கு இனிமையாகவும், முடிவு சுபமானதாகவும் இருக்கும்.
ரமணிசந்திரனின் நாயகிகள் அனைவருமே தைரியம் மற்றும் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள்.
ரமணிசந்திரன் கதையை எழுதுவதற்கு முன்பு கதைக்களத்தைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு எழுதுவார். மேலும் கதைகளில் சமீபத்திய நிகழ்வுகளை எழுதுவதன் மூலம் வாசகர்களை ஈர்க்கிறார்.
இன்றையக் காலக்கட்டத்தில் நம் அனைவரிடமும் தொலைப்பேசியும், இணைய வசதியும் இருக்கிறது. ஆனால் 90களில் இருந்த பெண்கள் இவரின் கதைகளில் மூலமே வெளியுலகைப் பற்றி தெரிந்து கொண்டார்கள்.
ரமணிசந்திரனின் பெரும்பான்மையான கதைகளில் துறை சார்ந்த தகவல் இருக்கும். சினிமாத் துறை, விளம்பரத் துறை, ஏற்றுமதி துறை, கட்டுமானத் துறை, பங்கு வர்த்தகத் துறை, காகிதத் துறை,துணி உற்பத்தி துறை என பல துறைகளைக் களமாக கொண்டு அருமையான கதைகளை எழுதியுள்ளார்.
ரமணிசந்திரன் அவர்கள் தன்னுடைய கதைகளில் புதிய தொழிநுட்பங்களையும் அழகாக இணைக்கிறார். அவருடைய கதைகளில் பேஸ்புக், வாட்ஸாப் வீடியோ காலிங், இன்ஸ்டாகிராம் (‘கேள்வியின் பதில் என்னவோ’ கதை நாயகி இன்ஸ்டாகிராமில் பௌடியூ வைத்திருப்பாள்) போன்றவற்றையும் சேர்த்து எழுதுகிறார்.
1970லிருந்து 2024வரை காலம் எவ்வாறு மாறியுள்ளது என்பதை எவருடைய கதைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ரமணிசந்திரன் கதைகளில் உணவு, உடை, கலாச்சாரம், பயணம் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி சுவாரஸ்யப்படுத்துகிறார்.