இனிப் போயின போயின துன்பங்கள்
கதாநாயகன்: சுதாங்கன்
கதாநாயகி: ரஞ்சனி
ஆண்டு: 2022
ஆசிரியர்: ரமணிசந்திரன்
சிவகாமிநாதன் தனது பெரும் செல்வத்தையும் சொத்தையும் இருப்பே தெரியாத தனது பேரக்குழந்தைக்கு உயிலாக எழுதி வைக்கிறார். சுதாங்கன் (கதாநாயகன்) ஒரு சட்டநிதி ஆலோசகன், சிவகாமிநாதனின் பேரக்குழந்தையைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.
ரஞ்சனி (கதாநாயகி) சுதாங்கனின் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணிபுரிகிறாள் .ரஞ்சனி அடிக்கடி சுதாங்கனின் குடும்ப உறுப்பினர்களால் தவறாக நடத்தப்படுகிறாள் .ரஞ்சனியும் ஒரு விசித்திரமான நபரால் பின்தொடரப்படுகிறாள். ரஞ்சனியைத் தனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும், பின்தொடர்பவரிடமிருந்தும் காப்பாற்ற சுதாங்கன் அவளை ஒரு சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்கிறான்.
ரஞ்சனியை பின் தொடர்பவர் யார்? சுதாங்கன், ரஞ்சனி மற்றும் சிவகாமிநாதனின் பேரக்குழந்தைக்கும் என்ன தொடர்பு? கதையின் முடிவில் ஒரு சிறு திருப்பத்தை வைத்திருக்கிறார் ஆசிரியர். மேலும் அறியக் கதையைப் படியுங்கள்.