ENNAI YAARENDRU ENNI RAMANICHANDRAN NOVEL
என்னை யாரென்று எண்ணி
கதாநாயகன்: சத்யசீலன்
கதாநாயகி: சுமனா
ஆண்டு: 1990’கள்
ஆசிரியர்: ரமணிசந்திரன்
சத்யசீலனின் (கதாநாயகன்) அத்தை மகன் மனோகருக்கு சுமனாவை (கதாநாயகி) பிடிக்கிறது. மனோகரனின் தாய் காமேஸ்வரிக்கு மனோகர் சுமனாவை விரும்புவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே மனோகருக்கு தெரியாமல் சுமனாவை மனோகரின் வாழ்விலிருந்து அகற்றிவிடும்படி சத்யனிடம் கேட்கிறாள்.
சுமனாவையும் மனோகரையும் சந்திக்க சத்யன் மதுரைக்கு செல்கிறான். துடிப்போடும், தைரியமாகவும் இருக்கும் சுமனாவை சத்யனுக்கு பிடித்துவிடுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு மனோகருடனான அவளது உறவை அவன் தவறாகப் புரிந்து கொள்கிறான். சத்யன் தனது அத்தை காமேஸ்வரியின் எதிர்பார்ப்புகளைப் பற்றி பொறுமையாக விளக்கி, மனோகரை விட்டு விலகி இருக்கும்படி சுமனாவைக் கேட்கிறான்.
சுமனா சத்யனை அலட்சியப்படுத்தி, எரிச்சலூட்டுகிறாள். சுமனாவைப் பற்றி சத்யனால் முடிவெடுக்க முடியவில்லை. இதற்கிடையில் சுமனா மனோகருக்கும் நளினிக்கும் இடையே திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்கிறாள். திருமணத்தைப் பற்றி மீண்டும் தவறாகப் புரிந்துகொண்ட சத்யன் திருமணத்தை நிறுத்த விரைகிறான்.
சத்யன் தன் தவறை உணர்வானா? மேலும் அறிய நாவலைப் படியுங்கள். இந்த நாவல் எனக்கு தனிப்பட்ட விருப்பமானது. சத்யனுக்கும் சுமனாவுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவாரசியமாக இருக்கும். இந்த நாவலை நீங்கள் படித்திருக்கிறீர்களா? கருத்துப் பிரிவில் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.