BANUMATHI RAMANICHANDRAN NOVEL
பானுமதி
கதாநாயகன்: ராஜேந்திரன்
கதாநாயகி: பானுமதி
ஆண்டு: 1980’கள்
ஆசிரியர்: ரமணிசந்திரன்
பானுமதி (கதாநாயகி) தன் தந்தை மற்றும் சித்தியுடன் வசித்து வருகிறாள். பக்கத்து வீட்டில் இருக்கும் ரகுபதி பானுமதியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். ரகுபதியின் ஆசையை அறிந்து கொண்ட பானுமதியின் மாற்றாந்தாய் ரகுபதியிடம் நன்றாக வேலை வாங்குகிறார். இதைத் தடுக்க முயலும் பானுமதியின் முயற்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை.
ராஜேந்திரன் (கதாநாயகன்) ஒரு பணக்கார தொழிலதிபன். பானுமதியை ஒரு திருமணத்தில் சந்தித்து அவள் மேல் ஆசைப்படுகிறான். ராஜேந்திரன் அடிக்கடி பானுமதியின் வீட்டில் உள்ள அனைவரையும் சந்தித்து பரிசுகள் கொடுக்கிறான். ஒரு நாள் ராஜேந்திரன் பானுமதியின் பெற்றோரிடம் அவளைத் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்கிறான். பானுமதியின் பெற்றோர் சம்மதிக்கிறார்கள். நிச்சயதார்த்தமும் நடைபெறுகிறது.
ரகுபதி ஆத்திரமடைந்து ராஜேந்திரனைப் பற்றி மோசமாகப் பேசி திருமணத்தை நிறுத்த முயல்கிறான். மேலும் ரகுபதி அடிக்கடி பானுமதியை வழிமறித்து தொந்தரவு செய்கிறான். பானுமதி ராஜேந்திரனின் உதவி கேட்கிறாள். ராஜேந்திரன் ரகுபதிக்கு வேறொரு ஊரில் நல்ல வேலையை ஏற்பாடு செய்கிறான்.
பானுமதியும், ராஜேந்திரனும் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். பானுமதியும், ராஜேந்திரனும் தேனிலவுக்கு மகாபலிபுரத்திற்கு செல்லும்போது ரகுபதி அவர்களை பின்தொடர்ந்து தொல்லை செய்கிறான். எதிர்பாராதவிதமாக லாரியில் அடிப்பட்டு இறந்துவிடுகிறான். பானுமதி, ரகுபதியின் மரணத்திற்கு ராஜேந்திரன் தான் காரணம் என எண்ணி அவனிடம் சண்டைபோடுகிறாள். ரகுபதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பிறகு பானுமதிக்கு உண்மை புரிகிறது.
இந்நிலையில் பானுமதி ரகுபதியின் நண்பர்களால் கடத்தப்படுகிறாள் . அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மீதியை உருவாக்குகிறது. இந்தக் கதையைப் படித்தீர்களா? கருத்துப் பிரிவில் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்நாவலின் ஆடியோவைக் கேட்க கீழே கிளிக் செய்யவும்.
https://www.youtube.com/watch?v=uveuv1p-L3U